பக்கம்:விசிறி வாழை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினைந்து 149 அனுப்பிவிட்டு இப்போது அவர் வீட்டுக்குப் போய் நின்றால் என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்? -

எது வேண்டுமானலும் எண்ணிக் கொள்ளட்டும். என்னுல் இனி ஒரு கணமும் அவரைப் பாராமல் இருக்க முடியாது. பார்வதி உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று மாகல கல்லூரி முடிந்ததுதான் தாமதம். வழக்க மாக வீடு நோக்கிச் செல்லும் பார்வதியின் கார், அன்று சேதுபதியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. *ளங்க வீட்டுக்கா போlங்க மேடம்?” என்று கேட்டாள் காரில் உட்கார்ந்திருந்த பாரதி.

ஆமாம்” உறுதியாக வெளி வந்தது பார்வதியின் பதில்.

காரணம் கேட்கும் அளவுக்குத் துணிவு இல்லாத பாரதி மெளனமாகி விட்டாள். ராஜாவைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது. பார்வதியின் கார் உள்ளே நுழைந்த சமயம், சேதுபதி தற்செயலாக வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். -

‘ஒரு வேண் இன்று பார்வதி வந்தாலும் வரக்கூடும்’ என்று அவருடைய உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சரியாகவே போய்விட்டது.

காரிலிருந்து இறங்கிய பார்வதியை முக மலர்ச்சியுடன் வரவேற்ற சேதுபதி, வாருங்கள்...வாருங்கள்......பாரதி எப்படிப் படித்துக் கொண்டிருக்கிருள்.ே..” என்று விசாரித் தார். R: ‘அதிக வேகல இருப்பதால் இனி மாலே வேளைகளில் வரமுடியாதென்று கூறினிர்களே, இப்போது வேலையெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பார் என்று எதிர்பார்த்த பார்வதிக்குச் சேதுபதியின் விஞ வியப்பூட்டியது.

‘எவ்வளவு பெருந்தன்மையான போக்கு எவ்வளவு உயர்ந்த புண்பு- பார்வதி எண்ணிக் கொண்டாள். -

“பாரதி நன்றாகவே படித்து வருகிருள். ஞாபக மறதி தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. எந்தப் புத்தகம் கேட்டாலும் அந்தப் புத்தகத்தை மறந்து வந்துவிட்டதாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/153&oldid=687007" இலிருந்து மீள்விக்கப்பட்டது