பக்கம்:விசிறி வாழை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினைந்து 1853

காதல் என்ற புனிதமான சொல் ஒரு கேடா? சே! புத்தகமா இது எழுத்தா இது? கிழவிக்கும் கிழவனுக்கும் காதலாம்! வெட்கக் கேடு து...” என்று அந்தப் புத்தகத்தைக் கோப மாக அப்பால் வீசி எறிந்தான் ராஜா.

ராஜாவின் வார்த்தைகள் பார்வதியின் உள்ளத்தில் ஈட்டிகளாகப் பாய்ந்தன. ‘தன்னேயே குற்றம் சாட்டிப் பேசுகிருனே?’ என்று கூட அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. அவளால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தானே அந்தக் குற்றவாளியாக மாறி அவன் எதிரில் நிற்பது போன்ற ஒரு மயக்கம்! -

மெளனமாகத் திரும்பிய பார்வதி மெதுவாக அவ் விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் கால்கள் வாசல் பக்கம் செல்லவில்லை. அதற்குப் பதிலாக மாடிப்படிகளை நோக்கி நடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/157&oldid=687012" இலிருந்து மீள்விக்கப்பட்டது