பக்கம்:விசிறி வாழை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விசிறி வாழை

கலந்துவிட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் களைந்து விடக் கூடியதாயிருந்தால் அது உண்மையான பற்றுதலா யிருக்க முடியுமா ? .

ஆமாம், நீ ஏன் ராஜாவுக்காக உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். பார்வதியின் உள் மனம் அவளேக் கேட்டது. -

  • ராஜாவை நீ உன் சொந்த மகனைப்போல் பாசம் வைத்து வளர்த்தாய். இப்போது அவன் பெரியவகை வளர்ந்து, உலகம் தெரிந்தவகை, நல்லது கெட்டது புரிந்தவகை ஆகியிருக்கிருன். இத்தனை வயது கடந்த பிறகு, நீ ஒருவரின் நட்பை விரும்புகிறாய், உறவை நாடுகிறாய் என்று அவன் அறிய நேரிட்டால் அவன் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான், உன் உறவையே முறித்துக்கொண்டு உன்னே அநாதையாக்கிவிட்டு உன் முகத்திலேயே விழிக்க விருப்பமின்றி, உன்னைப் பிரிந்து போய்விடுவான்’ என்றது இன்னெரு குரல்.

போகட்டுமே; எனக்கென்று ஒரு வாழ்வு கிடையாதா?’ ‘உண்டு; ஆல்ை அதைக் காலம் கடந்து விரும்புகிறாய் இப்போது ராஜாவைப் புறக்கணித்துவிட்டுச் சேதுபதியை நீ மணந்துகொண்டால் உலகம் உன்னைச் சுயநலக்காரி என்று துாற்றும்.” -

கடைசியில் பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். சேது பதியை அன்றாேடு, அந்தக் கணத்தோடு மறந்துவிடுவது என்பதே அந்த முடிவு.

அப்போது கடிகாரத்தில் மணி ஒன்பது அடிக்கும் ஓசை அவள் காதில் விழுந்தது. -

‘இன்னும் அரை மணி நேரத்திற்குள் காலேஜுக்குப் புறப்பட வேண்டும்’ என்ற கடமை உணர்ச்சியால் உந்தப் பட்டவள், மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

அத்தையின் வரவுக்காகத் தினமும் காத்திருக்கும் ராஜாவை இன்று காணவில்லை. அவன் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான் என்பதைச் சற்று முன்பு கேட்ட ஸ்கூட்டரின் ஒலியிலிருந்தே பார்வதி புரிந்துகொண் டாள். அவனே நிமிர்ந்து நோக்கவும், அவனுடன் பேசவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/160&oldid=687018" இலிருந்து மீள்விக்கப்பட்டது