பக்கம்:விசிறி வாழை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினறு Jo7

கூடக் கூசிக்கொண்டிருந்த பார்வதிக்கு, அவன் அங்கே இல்லாதது ஆறுதலாகவே இருந்தது.

பார்வதி அதிகம் பேசவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு குறித்த நேரத்திலேயே கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டாள். வழக்கம்போல் செவிட்டுப் பெருமாள் முக்காலியை விட்டு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினன். கல்லூரிக் காம்பெனண்டுச் சுவர் நெருங்கும்போது காலே விந்தி வி ந்தி நடந்து வந்துகொண்டிருந்த மிஸஸ் அகாதா ஹலோ குட்மார்னிங் என்றாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம். $

பார்வதி காரைத் தன் அறைக்கு நேராகக் கொண்டு போய் நிறுத்துவதற்குள், அட்டெண்டர் ரங்கசாமி ஒடி வந்து காரின் கதவைத் திறந்தான். இதற்குள் பிரின் ஸிபால் வந்துவிட்டார் என்ற சேதி கல்லூரியெங்கும் பரவிவிடவே, பேச்சுக் குரல் அடங்கி அமைதி நிலவிற்று.

பார்வதி அமைதியாகத் தன் அறைக்குள் போது, அமர்ந்து கொண்டாள். அவள் கையெழுத்துக்காக மேஜை மீது ஏதேதோ கடிதங்கள் காத்திருந்தன. அவற்றைப் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். பகல் ஒரு மணிக்கு வெளி நாட்டிலிருந்து யாரோ கல்வித் துறை நிபுணர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித் துக் கல்லூரியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். உதவிப் பிரின்ஸிபாலுக்கு உடம்பு சரியில்லே. அவளுக்குப் பதிலாக வகுப்புக்குச் சென்று பாடங்கள் நடத்த வேண்டும். மாஜ நாலு மணிக்கு அவர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வேறு சென்றாகவேண்டும். பார்வதிக்கு லேசாகத் தஅலயை வலித்துக்கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக்கொண்ட வனாய், தன் கடமைகளை முடிந்த வரையில் செய்து முடித்தாள் பார்வதி.

மணி மூன்று. அவளால் உட்கார்ந்திருக்கவும் முடியாத நிக்ல. பாரதியை அழைத்துவரச் சொன்ள்ை.

அவள் வந்ததும் பாரதி! இன்று எனக்கு உடம்பு சரியில்கல. ஆகையால் டியூஷனை நாகாக்கு வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/161&oldid=687019" இலிருந்து மீள்விக்கப்பட்டது