பக்கம்:விசிறி வாழை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f58 விசிறி வாழை

கொள்ள வேண்டியதுதான். நான் இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்’ என்று கூறிப் புறப்பட்டாள்.

பார்வதி, சாரதாமணிக் கல்லூரியின் தலைமைப் பதவியை ஏற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலைவலி என்று சொல்லிக் கல்லூரிக்கு வராத நாளே கிடையாது.

பார்வதி முக்கிய அலுவல்களே யெல்லாம் ரத்து செய்து விட்டு, கடமைகளை யெல்லாம் மறந்துவிட்டு, கல்லூரியி லிருந்து இரண்டு மணி முன்பாகவே புறப்பட்டுச் சென்றது அன்றுதான் முதல் தடவை.

மாடியில் போய்ப் படுத்தவள்தான். மாலே ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. கடுமையாகக் காற்று வீசிக்கொண் டிருக்கவே, அவள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந் தாள். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.

சேதுபதி தன்னைக் காணவந்திருப்பது போல் ஒரு பிரமை, அவரை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந் தது. அவரை இனி நான் சந்திக்கவே மாட்டேன். சந்திப்பதால் என் உள்ளத்தில் வளரக்கூடிய எண்ணத்துக்கு இனி இடம் தரமாட்டேன்’ என்று எண்ணுகிருள்.

‘அத்தை அத்தை!’ என்று அவசர அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிவரும் ராஜாவின் பூட்ஸ் ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ராஜாவின் முகத்தைப் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. ராஜாவின் கைகள் தன் நெற்றியைத் தொடுவதை உணர்ந்த பார்வதி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்ன அத்தை! நல்ல ஜூரம் அடிக்கிறதே! உங்களுக்கு என்ன உடம்பு!”...பதறிப்போன ராஜா, கீழே ஒடிச்சென்று தர்மாமீட்டரைக் கொண்டுவந்து பரிசோதித்தான்.

“101 டிகிரி’ என்று அறிந்தபோது, ராஜாவின் கண்கள் கலங்கின. --

வி. வா.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/162&oldid=687020" இலிருந்து மீள்விக்கப்பட்டது