பக்கம்:விசிறி வாழை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினறு 159

‘ஒன்றுமில்லே ராஜா இன்றிரவு பட்டினி போட்டால் நாகாக்குச் சரியாகிவிடும்’ என்று பார்வதி ஈன சுரத்தில் கூறிள்ை. -

நீ சாப்பிடவில்லை யென்றல், நானும் சாப்பிடப் போவதில்லை. நான் போய் டாக்டரை அழைத்து வருகி றேன்’ என்று கூறிப் புறப்பட்ட ராஜா, சற்று நேரத்துக் கெல்லாம் டாக்டருடன் திரும்பி வந்தான்.

பார் வதியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பாலம் மாள் சிரித்துக்கொண்டே, நான் டாக்டர் தொழிலை மேற்கொண்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இதுவரை உங்களுக்குத் தலைவலி என்று கூடக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குச் சிகிச்சை செய்ய இப்போதாவது எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே!’ என்றாள்.

‘அப்படியாளுல் எனக்கு ஜுரம் வந்தது பற்றித் தாங்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறீர்கள், இல்லையா ??? என்று கேட்டாள் பார்வதி; பாலம்மாள் சிரித்தாள்.

‘பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை. சாதாரண ஜூரம்தான். நான் மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். சாப்பிடுங்கள். நாளைக்கு ஜூரமே இருக்காது. ஆனல் ஓய்வு ரொம்ப முக்கியம்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.

சாப்பிடலாமா?’ என்று கேட்டான் ராஜா.

‘ஓ’ என்றாள் டாக்டர்.

போர்த்தீர்களா அத்தை டாக்டரே சாப்பிடச் சொல்லி விட்டார்’ என்றான் ராஜா. .

டாக்டர் புன்சிரிப்புடன் திரும்பி, சாப்பிடலாம் என்று நான் கூறியது உன்னத்தான். உன் அத்தையை அல்ல’’ என்றாள்.

போர்த்தாயா ராஜா போய்ச் சாப்பிடு? என்றாள் அத்தை.

அன்றிரவெல்லாம் பார்வதிக்குத் தூக்கமே இல்லை. பழைய சம்பவங்களெல்லாம் துண்டு துண்டாகப் பார்வதி யின் நினைவில் தோன்றின. பலவீனம் காரணமாகக் கண் னெதிரில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/163&oldid=687021" இலிருந்து மீள்விக்கப்பட்டது