பக்கம்:விசிறி வாழை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 விசிறி வாழை

என்னுடைய கணவரின் அன்புக்குப் பத்திரமாகப் பார்க்கிருயா; அம்மா'-சரஸ்வதியின் குரல்.

காகிதக் குப்பைகளுக்கிடையே பளிச்சிடும் திருமண அழைப்பிதழ், விமானக் கூடத்தில் அவருடைய மூக்குக் கண்ணுடியைக் கொண்டு கொடுத்தபோது அவர் பார்த்த பார்வை-கூறிய வார்த்தை . r

பெண்கள் ஒளவையைப் போல் கல்வி அறிவு பெற வேண்டும். ஆனல் ஒளவையைப் போல் திருமண வாழ்க் கையே வேண்டாம் என்று கூறிவிடக் கூடாது’ என்று தான் கூறியபோது அவர் சிரித்த சிரிப்பு... ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. விடியும் நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள் பார்வதி. ராஜா வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜூரம் இப்போது துளிக்கூட இல்லை என்று தெரிந்ததும். அவன் அவளே எழுப்பாமலே போய் விட்டான். பார்வதி கண்விழித்துப் பார்த்தபோது தன் அறைக்குள் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

கடிகாரத்தில் மணி பத்து அடித்துக் கொண்டிருந்தது. “ஓ! மணி பத்தாகி விட்டதா’ படுக்கையை விட்டு எழுந்த பார்வதி, அவசர அவசரமாகக் கீழே இறங்கி வந்துவிட்டாள். ஞானம் பதறிப்போய், நீங்கள் இன்று காலேஜுக்குப் போகக்கூடாது. டாக்டர் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்’ என்றாள்.

“கல்லூரிக்குப் போல்ை எனக்கு எல்லாம் சரியாகி விடும். ஜூரம் நேற்றாேடு போய்விட்டது. மணி பத்தடித்து விட்டது. நான் போய் வருகிறேன்’ என்று ஞானத்திடம் சொல்லிக் கொண்டவள், சாப்பிடாமலேயே புறப்பட்டு விட்டாள். -

அன்று பார்வதியின் கார் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வில்லை. அவன் வழக்கமாக எழுந்து நின்று கும்பிடு போடும் நேரத்தில் போட்டுவிட்டான். இன்றைக்குப் பார்வதி லேட்! பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, அங்கே மிஸஸ் அகாதாவைக் காணவில்லை. அகாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/164&oldid=687022" இலிருந்து மீள்விக்கப்பட்டது