பக்கம்:விசிறி வாழை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினேழு

பார்வதி கண் விழித்துப் பார்த்தபோது தன் வீட்டு மாடி அறையில் உள்ள கட்டிலில்தான் படுத்துக்கொண்டிருப் பதை உணர்ந்தாள். கல்லூரியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்ட பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை.

ராஜா, பாரதி, ஞானம், கல்லூரி மாணவிகள் சிலர், மிஸஸ் அகாதா, இன்னும் சில புரொபஸர்கள் அத்தனைப் பேரும் அந்த அறைக்குள் கவலே தோய்ந்த முகத்துடன் பார்வதியையே பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது இரவு பதிைேரு மணி இருக்கலாம். பார்வதி, அவர்கள் எல்லோரையும் ஒரு முறை கண்ணோட்டமிட்டு நீங்களெல்லோரும் எத்தனை நேரமாக இங்கே காத்திருக் கிறீர்கள்? பாவம் சாப்பிட்டீர்களா, இல்லையா? ராஜா! இவர்களை யெல்லாம் கீழே அழைத்துக்கொண்டு சென்று சாப்பிடச் சொல்லு...” என்று ஈனஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினுள். --

  • முதலில் நீங்கள் சாப்பிடுங்க” என்று கூறி, பக்கத் திலிருந்த ஹார்லிக்ஸை எடுத்துத் தன்கையாலேயே கலந்து கொடுத்தாள் மிஸஸ் அகாதா. .

அந்த பிரெஞ்சு ஆசிரியையின் அன்பு, பார்வதியின் கண்களைப் பணிக்கச் செய்து விட்டது.

‘பாவம் நீங்கள் கூடவா மாடிப்படி ஏறி என்னைப் பார்க்க வந்திருக்கீங்க கல்லூரியில்கூட மாடியில் நடக்கும் வகுப்பாயிருந்தால் பாடம் நடத்தப் போக முடியாதென்று கூறுவீர்களே!’ என்றாள் பார்வதி.

  • நான் என்ன! கல்லூரி முழுதுமே இங்கேதான் இருக்குது...’ என்றாள் அகாதா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/167&oldid=687025" இலிருந்து மீள்விக்கப்பட்டது