பக்கம்:விசிறி வாழை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று i8

சேரி, இன்னொரு ஆணியைக் கொடுங்கள்’’ என்று பாரதியைப் பார்த்துக் கேட்டான் ராஜா. ... .

பாரதி கொஞ்சம் வலுவான ஆணியாகவே எடுத்துக் கொடுத்தாள்.

அதைக் கையில் வாங்கியபடியே, முதல் முதல் ஆணியைக் கண்டு பிடித்தவர் யார்?’ என்று ஒரு குவிஸ்’ கேள்வி போட்டான் ராஜா.

‘முதல் முதல் சுத்தியலேக் கண்டு பிடித்த மேதாவி யார்?’ என்று பதிலுக்கு இன்னெரு குவிஸ்? கேள்வி போட்டாள் பாரதி! .

‘யார் கண்டு பிடித்திருந்த போதிலும், அவ்விரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகள்’ என்றான் ராஜா.

‘அதெப்படி?’ என்று கேட்டாள் பாரதி. ‘ஆணியைக்கண்டால் அதன் மண்டையில் அடிக்கிறது இந்தச் சுத்தியல். சுத்தியலேக் கண்டால் எதிர்த்து நிற்கிறது இந்த ஆணி. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்றுளதிரிகள்!’’ இப்படியே நீங்கள் சுவர் முழுவதும் ஆணி அடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் இன்னொரு புதிய ஹாஸ்டலே கட்ட வேண்டியதுதான்...தரையில் பாருங்கள்; எத்தனே ஆணிகளே வளைத்துப் போட்டிருக்கிறீர்கள்?’’

இன்னொரு ஆணியை வாங்கிப் பலமாக அடித்த ராஜா, “ஐயோ! என்று அலறியபடியே கீழே குதித்து இடது கையை உதறிக் கொண்டான். சுத்தியல் அவன் இடது கைக் கட்டை விரல் நசுக்கிவிடவே இரத்தம் பெருகிவந்தது. கையிலிருந்து பெருகி வழிந்த ரத்தத்தைக் கண்டதும் பாரதி பயந்து போய்விட்டாள்.

அவன் கட்டை விரல்க் கெட்டியாகப் பிடித்துக்கொண் டவள், சிநேகிதிகள் பக்கமாகத் திரும்பி ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் ப்ளீஸ்’ என்று பரபரத்தாள்.

பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப் போவதாகப் இபரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு......என்று அந்தப் பொல்லாத பெண்கள் கண் சிமிட்டிய

யபடியே முதல் உதவிப் பெட்டியைக் கொண்டுவர ஓடினர்கள். -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/17&oldid=687029" இலிருந்து மீள்விக்கப்பட்டது