பக்கம்:விசிறி வாழை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விசிறி வாழை

அறைக்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த

சேதுபதி, பார்வுதியைப் பார்க்கவே விரும்பவில்லே. காரணம் தன்னைக் கண்டதும் அவளால் படுத்திருக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து விடுவாள். அந்தச் சிரமத்தை அவளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவர் எண்ணியது தான். -

ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கடைசியில் மிஸஸ் அகாதா விடைபெற்றுக்கொள்ள வந்தபோது பார்வதியின் கண்கள் கலங்கி விட்டன. கன்லே விந்தி விந்தி நடக்கும் அகாதா விடம் பார்வதிக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. வானமே இடிந்தாலும் பூமியே பிளந்தாலும் அகாதா கல்லூரிக்கு வரத் தவறியதில்லை.

எரோஜன்! இந்த பிரெஞ்சு லேடியைக் காரிலே கொண்டு போய் விட்டுவிட்டு வா’ என்று பார்வதி கூறியபோது, எஇவர்களை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். ராஜாவை எங்கும் அனுப்ப வேண்டாம். ராஜா நீ இங்கேயே இருந்து அத்தையைக் கவனித்துக்கொள். ஏதாவது முக்கியமாயிருந்தால் எனக்கு உடனே டெலிபோன் செய்’ என்சூர் சேதுபதி, வராந்தாவில் நின்றபடியே.

“தாங்க் யூ” என்று கூறிப் புறப்பட்டாள் அகாதா.

“அப்பா! நான் இங்கேயே இருக்கட்டுமா?’ என்று கேட்டாள் பாரதி.

வேண்டாம்; நீ என்னோடு வந்துவிடு. நாம் வீட்டுக்குப் போனதும் உன் அத்தையை இங்கே அனுப்பி வைக்கலாம். நம்மைக் காட்டிலும் அவள் இங்கே இருந்தால் உன்னுடைய பிரின் எலிபாலுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பாள்?’ என்றார் சேதுபதி. -

சேதுபதியின் அன்பு மொழி ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்தைச் சஞ்சலத்திலாழ்த்தின. நேற்று முன் தினமா யிருந்தால் அந்த மொழிகள் அவளுக்கு இனித்திருக்கும். இப்போது அவற்றை அவள் கசப்பு மாத்திரைகளாக்கி விழுங்கிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/170&oldid=687030" இலிருந்து மீள்விக்கப்பட்டது