பக்கம்:விசிறி வாழை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினேழு 169

செய்யவும் இல்லை. அவர் தன்னிடம் அன்பு கொண்டிருப் பதை அவள் உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளாமல், அவர் வருகிறபோதும், பேசுகிறபோதும், உணர்ச்சியற்ற மரக் கட்டையாக இருந்து சர்வ சாதாரணமாகப் பதில் கூறிக்கொண்டிருந்தாள். -

இப்போது? அவர் ஆசையோடு கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருக்கிற மாதுளம் பழங்களைச் சாப்பிடுவதா, வேண்டாமா?

கூடாது; இதைச் சாப்பிட்டால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பை நான் ஏற்றுக் கொள்வதாகும். இந்தப் பழங்களே நான் கையிலுைம் தொடமாட்டேன். இன்று மாலே அவர் இங்கே வருவார். வந்ததும் வராததும் மாதுளம் பழங்களை நான் சாப்பிட்டு விட்டேன என்று கவனிப்பார். பழங்கள் அப்படியே கிடப்பதைக் கண்டதும் என்மீது அவருக்குக் கோபம் கோபமாக வரும். என்னிடம் வெறுப்புத் தோன்றும். பிறகு அவர் என்னிடம் வைத்துள்ன பாசத்தை, நேசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட எண்ணுவார். அதைத்தான் நானும் எதிர் பார்க்கிறேன்.” அவள் அந்தப் பழங்களைத் தொடவே இல்லை.

மாசில ஐந்து மணி. சேதுபதியின் கார் வரும் ஓசை கேட்டுப் பார்வதியின் இதயம் அடித்துக் கொண்டது.

‘தாங்கள் வைத்து விட்டுச் சென்ற மாதுளங்கனிகள் அமுதமாக இனித்தன என்று பார்வதி கூறுவாள். அந்தப் பதிலேக் கேட்டதும் என் முகத்தில் எந்தவித மாறுதலும் தோன்றக் கூடாது...” இவ்வாறு எண்ணியபடியே படிகளைக் கடந்து பார்வதியின் அறையை அடைந்தார் சேதுபதி.

பார்வதி அவரை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியுமே இல்லை.

‘நன்றாகத் தூங்கினர்களா?’ சேதுபதி ஆவலுடன் கேட்டார். -

‘தூங்கினேன்... பார்வதியின் பதிலில் அத்தன் உற்சாகமில்லை.

சேதுபதியின் பார்வை பழங்கள்மீது பதிந்தது, காலையில் வைத்து விட்டுப்போன அத்தனைப் பழங்களும் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/173&oldid=687033" இலிருந்து மீள்விக்கப்பட்டது