பக்கம்:விசிறி வாழை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 விசிறி வாழை

‘ஏன் இப்படிப் பேசுகிருள்? ஒருவேளை உடல் நிலை ஆரியில்லாதது காரணமாயிருக்குமோ? சேதுபதி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்போல், “சரி, நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்?’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

பார்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய கம்பீரமான தோற்றமும், பெருந்தன்மை மிக்க பேச்சு, பேச்சிலே கனிந்த அன்பு எல்லாவற்றையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தாள்.

அவர் மாடிப்படிகளில் நடக்கும்போது, ஒவ்வொரு படியாகக் காலடி எடுத்து வைக்கும் ஓசையைக் கவனமாகக் கேட்கலாள்ை.

‘அவரை நேரில் காணும்போது ஆசை, அன்பு, பாசம், பரிவு எதுவுமே இல்லாதவள்போல் வெறுப்பாகப் பேசு கிறேன். அவர் கண்களிலிருந்து மறைந்ததும் அவரைக் காணத் துடிக்கிறது என் உள்ளம். ஐயோ, இதென்ன விசித் திரம்? இந்த வேதனையிலிருந்து என க்கு விடுதலையே கிடையாதா?

அவள் துக்கமெல்லாம் கண்ணிராகப் பெருகிக்கொண் டிருந்தது.

கீழே, சேதுபதி யாருடனே பேசிக்கொண்டிருப்பது கேட்கவே அதை உற்றுக் கவனித்தாள்.

‘காமாட்சி! நான் அப்புறம் வருகிறேன். பார்வதியின் உடம்பு குணமாகிறவரை, நீ இங்கேயே இருந்து கவனித்துக் கொள். அவர் மனத்தில் எதையோ வைத்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. அவர் படித்தவர். அத்துடன் சிறந்த அறிவாளி...’

சேதுபதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்துக்குள் புகுந்து மாதுளை முத்துகளாய் இனித்தன. ‘என்னிடம் இவர் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்? எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்? என் உள்ளத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்!’ மீண்டும் அவருடைய குரல் கேட்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/176&oldid=687037" இலிருந்து மீள்விக்கப்பட்டது