பக்கம்:விசிறி வாழை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினெட்டு 177

சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் மேலே வந்தார்கள். ‘இரண்டு நாட்களாக வேலே சரியாயிருந்தது. அதனல் தங்களை வந்து காண முடியவில்லை. மன்னிக்கவேண்டும்’ என்றனர்.

. இப்போது மணி என்ன தெரியுமா?’ பார்வதி கேட்டாள். - -

‘பதினென்று...” - ‘இப்போது கல்லூரி நடக்கும் நேரத்தில், வகுப்புக்குப் போகாமல் இங்கே வந்திருக்கக் கூடாது...”

தேங்களே இரண்டு நாட்களாகக் காணுமல் இருந்ததே தவறு.’’

‘கல்லூரி நேரத்தில் வகுப்பை விட்டு வந்தது அதை விடப் பெரிய தவறு. உங்களுடைய முதல் கடமை படிப்பு தான். படிப்பையும் பரீட்சையையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கக் கூடாது. இந்தச் சின்ன விஷயம் மாணவி களாகிய உங்களுக்குத்தான் தெரியவில்லே யென்றால், ஆசிரியைகளாவது உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சரி, நேரத்தை வீணுக்காமல் புறப்படுங்கள் ’’ கொஞ்சம் கடுமையாகவே பேசி முடித்தாள் பார்வதி. பிரின்ஸிபாலின் கண்டிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே ஆகவே, போய் வருகிருேம்’ என்று தாழ்ந்த குரலில் விடைபெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள் அவர்கள்.

அவர்கள் சென்றதும், ‘பாவம், கண்டிப்பாகப் பேசி அனுப்பி விட்டேன். கொஞ்சங் கூடப் பண்பில்லாதவள் நான்.’’ வருத்தத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண் டாள் பார்வதி.

ஆயிற்று; பார்வதி படுக்கையாகப் படுத்து விளையாட் டாகப் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. காமாட்சியும் ஞானமும், பார்வதியின் உடம்பைத் தேற்றுவதற்கு இரவு பகலாகக் கண் விழித்துப் பாடுபட்டும் அவள் உடம்பு தேருமல் நாளுக்கு நாள் கேவலமாகிக் கொண்டே யிருந்தது. உள்ளத்தில் வேதனைகள் புகுந்து அளித்துக் கொண்டிருக்கும் போது உடலை எவ்வளவு போஷித்தும் என்ன? - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/181&oldid=687043" இலிருந்து மீள்விக்கப்பட்டது