பக்கம்:விசிறி வாழை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 விசிறி வாழை

சேதுபதியின் அன்பைப் பார்வதி என்று மறந்துவிடத் துணிந்தாளோ அன்று முதல் அவளுக்கு நிம்மதியே இல்லை. அவருடைய அன்பை அவளால் மறக்கவோ மறுக்கவோ முடியாமல் உள்ளத்தில் வலி கண்டு, அந்த வலியே அவள் உடல் இளைக்கச் செய்து கொண்டிருந்தது.

பார்வதி கண்களை மூடிப் படுத்திருந்தாள். பழ. ரசத் துடன் மெதுவாகக் கட்டிலின் அருகே வந்து நின்றாள் பாரதி. கண் விழித்த பார்வதி, பாவம்’ என்னுல் உங்களுக் கெல்லாம் சிரமம்...பரீட்சையெல்லாம் சரியாக எழுதி யிருக்கிருயா, பாரதி ராஜாவை எங்கே காணுேம் அவன் எப்படி எழுதியிருக்கிரும்ை?’ என்று கேட்டாள்.

“இரண்டு பேருக்குமே நேற்றேடு பரீட்சை முடிந்து விட்டது. நன்றாகவே எழுதியிருக்கிருேம்.’’ என்றாள் பாரதி. ரொம்ப சந்தோஷம். ராஜாவை இங்கே வரச் சொல்லு...”*

கூேப்பிட்டீங்களா அத்தை!’ என்று .ே க ட் டு க் கொண்டே வந்து நின்றன் ராஜா.

‘பரீட்சையில் எப்படி எழுதியிருக்கிறாய் என்று கேட்கத் தான் கூப்பிட்டேன்...லீவு விட்டு விட்டார்கள் அல்லவா? இனிமேல் உன்பாடு குஷிதான். ஒரு படம்கூடத் தவற மாட் டாய்!” என்றாள் பார்வதி.

இேல்லே அத்தைl’’ என்று தலே கவிழ்ந்தபடியே கீழே இறங்கிச் சென்று விட்டான் ராஜா. அப்போது எதிரில் வந்த பாரதியைப் பார்த்து, ‘அத்தை நல்ல மூட்’லே இருக் கிருள். சினிமாவுக்குப் போக பர்மிஷன் வாங்கிவிடு. இது தான் நல்ல சமயம். இன்று மாலே மூன்று மணிக்கு நான் காலேஜிலிருந்து வந்து விடுவேன். எங்க காலேஜுக்கு எதிரில் காந்தி மண்டபம் இருக்கிறது. மூணு மணிக்கு நீ அங்கே வந்துவிடு. அதற்குப் பக்கத்தில் பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் நிறைய மான்கள் இருக்கின்றன. அந்த இடத்தைச் சற்று நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு ஆறரை மணி ஷோவுக்குப் போகலாம்.’’ என்றான்.

“சினிமாவுக்குப் போவதாகச் சொன்னல் பிரின்ஸிபால் என்னை வெளிய்ே அனுப்பவே மாட்டாங்களே!’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/182&oldid=689463" இலிருந்து மீள்விக்கப்பட்டது