பக்கம்:விசிறி வாழை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்தொன்பது

“அடுத்தாற்போல் எங்கே போகலாம்?’ என்று கேட் டாள் பாரதி.

சொர்க்கத்துக்கு...” என்றான் ராஜா. - ‘அந்த ரூட்”டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க! ......” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே

ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர். - ‘டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசlங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை உம்’மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...” என்றான் ராஜா.

‘எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நோமும் கவலைப் பட்டுக்கிட்டு இறக்கிறவங்களே வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்...’’ என்றான் டிரைவர்.

“பலே, பலே! நீ என் கட்சி!” என்றான் ராஜா. ‘எந்தப் பக்கம் போகணுங்க?...” டிரைவர் கேட்டான். ‘மவுன்ட் ரோடு பக்கம் தான்...?? . - ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!’’ என்றாள் பாரதி. -

‘அத்தை லேப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஒட்டல்லே முக்கால் மணி நேரம்...ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?...’

“...ம்...’ *அத்தை என்ன சொன்னங்க?...” ‘யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க...சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன் னேன். சரி?ன்னுட்டாங்க...” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/186&oldid=689467" இலிருந்து மீள்விக்கப்பட்டது