பக்கம்:விசிறி வாழை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. விசிறி வாழை

‘முதல்லே லேப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார்! அந்தக் கட்டடத்துக்கு முன்னலே நிறுத்து...” என்றான் ராஜா.

டாக்ளி அங்கேபோய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லேப்ரரிக்குள் சென்றனர்.

‘என்னே அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடா தீங்க. சம்பாதிக்கிற நேரம்’ என்றான் டிரைவர்.

“அதுவும் சரிதான்!” என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத் தனுப்பினன்.

“ரொம்ப சந்தோஷங்க’ என்று கூறிச் சென்றான் டிரைவா.

அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ளிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ளி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

“நீயே வந்து விட்டாயா?” என்றான் ராஜா. ‘ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க...ஒட்டலுக் குத்தானே?...” -

‘ஆமாம்...?? ‘எந்த ஓட்டலுக்கு??’ என்று கேட்டான் டாக்ளி டிரைவர்.

‘முன்னெரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட் டோமே... அந்த ஒட்டலுக்கே போகலாம்.’’ என்றாள் பாரதி.

டாக்ஸியை அந்த ஒட்டலுக்கு விடச் சொன்னன் ராஜா.

பேக்கத்திலேதான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிருேம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பின்ை.

பிறகு இருவரும் அந்த ஒட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலேயில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னுல் உட்கார்ந்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/188&oldid=689469" இலிருந்து மீள்விக்கப்பட்டது