பக்கம்:விசிறி வாழை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்தொன்பது 185

எேன்ன சாப்பிடlங்க?’ என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர்.

அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா. *

எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டாள் பாரதி.

‘எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன் ல்ை அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்...” என்றான் ராஜா. *. பாரதி சிரித்துக்கொண்டே அந்த லேப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினுள். - மேசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்’ என்றான் ராஜா.

ரொம்ப ட்ரை ஸ்ப்ஜெக்ட்! பிலாஸ்பிl இதைப் போய், வாங்கி வந்தீர்களே!’’ என்றாள் பாரதி.

‘இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை லப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்...”

சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கிள்ை.

‘மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சில கட்டி வைக்க வேண்டும்.’’ என்றான் ராஜா.

‘ஐ ஸ்க்ரீம் கண்டுபிடுத்தவனுக்கும் தான்’ என்றான் பாரதி.

“இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிருயா?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா.

‘இல்லே, இல்லே’ என்றாள் பாரதி. ஸர்வரைக கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுட்ைய காலேஜ் பிரின்ஸி பால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் ‘திருதிருவென்று விழிப்பதைக் கண்ட பாரதி, ‘ஏன் ராஜா ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க...?” என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/189&oldid=689470" இலிருந்து மீள்விக்கப்பட்டது