பக்கம்:விசிறி வாழை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று 15

உணர்ந்தாள். அதுவரை தன் வாழ்நாட்களில் அனுபவித் தறியாத புதுமையான உணர்வு அது.

யாரைக் கொண்டு அவருக்கு மாலே சூட்டுவது என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லே அவளுக்கு.

திடீரென்று கள்ளத்தனமாகத் தன்னுள் புகுந்து குருத்து விடத் தொடங்கியிருக்கும் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத் துணிந்தாள்; முடியவில்லே.

அந்தத் தங்க எழுத்துகள் மீண்டும் அவள் கவனத்தை ஈர்த்தன. அதைக் கண்ணுற்றபோது, ஆறு மாதங்களுக்கு முன் அவரைக் காணச் சென்றபோது நிகழ்ந்த விவரங்க ளெல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்தன.

அதற்குமுன் அவள் அவரைப் பார்த்ததே இல்லை. நிறையக் கேள்விப்பட்டிருக்கிருள். மிகவும் கண்டிப்பான வர்; அதிகம் பேசமாட்டார். யாருக்கும் அவருடைய பேட்டி எளிதில் கிட்டிவிடாது’ என்பதே அவரைப்பற்றி அவள் அறிந்திருந்த விஷயம். -

தான் அவரைக் காண வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினுல் நன்கொடை விஷயமாகத்தான் வந்திருக் கிறேன் என்பதை எளிதில் யூகித்து விடுவார்.

‘'இப்போது அவசர ஜோலியிருக்கிறது. அப்புறம் வந்து பார்க்கச்சொல்?’ என்று பதில் கூறி அனுப்பிவிடுவார் என்ற எண்ணத்துடனேதான் அன்று புறப்பட்டுச் சென்றாள். அங்கே போனபோது முற்றிலும் நேர்மாருகவே நடந்தது.

தன் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அனுப்பி விட்டு, உள்ளம் படபடக்க உட்கார்ந்திருந்தாள் பார்வதி. ஒரு கண நேரம் கூட ஆகவில்லை. தங்களை வரச்சொல் கிறார்’ என்று பியூன் வந்து அழைத்தபோது வியப்புத் தாங்கவில்லை. அவளுக்கு.

பார்வதி உள்ளே செல்லும்போதே அவர், ‘வாருங்கள், உட்காருங்கள். தங்களைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். கல்லூரியை மிக உயர்ந்த நிலக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்’ என்று பெருமிதத்தோடு சிரித்தார்.

“தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆசியும்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/19&oldid=689471" இலிருந்து மீள்விக்கப்பட்டது