பக்கம்:விசிறி வாழை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88 விசிறி வாழை

இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ??? என்று யோசித்தாள்.

ஞானத்தை அழைத்து வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்’’ என்றாள்.

‘பாரதி...’’ என்றாள் ஞானம். *ராஜா இன்னும் வரவில்லையா? பார்வதி கேட்டாள். ‘இன்னும் இல்லே...” *சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் கொல்!” என்று கூறி அனுப்பினுள் பார்வதி.

முதலில் பாரதியை டாக்ளியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ளியில் வந்து இறங்கின்ை.

அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, *ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்’ என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள்.

பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக் ஸ்டன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின் ஸிபால் என்ன பாரதி சினிமா நன்றா யிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க??? என்று அன்போடு விசாரித்தாள்.

‘இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னகரீன!. என்றாள் பாரதி. , “

‘டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்... ஆமாம்... ராஜா வந்து விட்டான?”

‘'இப்பத்தான் வந்திருக்கிறர்...’ ‘அவனேக் கூப்பிடு இங்கே...?? - ‘கூப்பிட்டீங்களா அத்தை!’ என்று இறைந்து சத்த மிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா.

தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/192&oldid=689474" இலிருந்து மீள்விக்கப்பட்டது