பக்கம்:விசிறி வாழை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 விசிறி வாழை

பார்வையிலும் சிரிப்பிலும் ‘ஏன் பொய் சொல்கிறாய்?” என்ற கேள்வி பொதிந்து கிடந்தது.

‘'ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?’’

“ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!”

‘இல்லே...கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலே இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந் தாரே!’’ என்றாள் பார்வதி.

‘அடப்பாவி மனுஷா இங்கேயும் வந்து விட்டாரா?” என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான்.

வி. வா.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/194&oldid=689476" இலிருந்து மீள்விக்கப்பட்டது