பக்கம்:விசிறி வாழை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 விசிறி வாழை

மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனப்பட்டாள். என்றுமில் லாத நிம்மதி காரணமாக, உள்ளத்தில் வியாபித்திருந்த மகிழ்ச்சி காரணமாக உணர்ச்சி பரவசமாகியிருந்த பார் வதிக்குத் தூக்கமே வரவில்லை.

திடீரென்று, கீழே, காமாட்சி யாருடனே மெல்லிய குரலில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பது பார்வதி யின் காதில் விழுந்தது. r

இன்னொரு குரல் யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் உற்றுக் கவனித்தாள். அவள் ஊகித்தபடி அது சேதுபதியின் குரலேதான்! அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை.

மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஒசை கேட் கவே, பார்வதி கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல் படுத்திருந்தாள்.

அறைக்கு வெளியே வந்து நின்ற சேதுபதியும் காமாட்சியும் ஜன்னலினூடே நிழலுருவமாகத் தெரிந்தனர். நீல விளக்கின் லேசான ஒளியில் தெரிந்த பார்வதி யின் முகத்தையே சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி.

‘எழுப்பட்டுமா, அண்ணு?....” காமாட்சி கேட்டாள். வேண்டாம்; நான் இங்கு வந்து போவதே அவருக்குத் தெரியக்கூடாது. அதற்காகவேதான் நான் இங்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறேன். நான் காரில் வந்தால் அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டுவிடப் போகிருரே என்பதற்காகவே நடந்து வருகிறேன்.” - -

டோக்டர் என்ன சொல்கிறார் அண்ணு??? காமாட்சி கேட்டாள். -

,,அதிர்ச்சியாலும் கவலேயாலும் அடிக்கடி மயக்கம் வருகிறதாம். ஆகையால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் படுக்கையிலேயே இருந்து ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். இந்த நிலையில் அவரை நான் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகவே தினமும் இந்த நேரத்தில் வந்து பார்த்து விட்டுப் போகி

3.

றேன்......'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/198&oldid=689480" இலிருந்து மீள்விக்கப்பட்டது