பக்கம்:விசிறி வாழை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விசிறி வாழை

முக்கியம். இப்போது கூடக் கல்லூரி விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தங்கள் நேரத்தை வீனுக்க மனமில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருக் கிருேம். அதற்குத் தங்களுடைய உதவியை எதிர்பார்க் கிருேம்,’’ என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த் தைகளே அப்படியே கூறிமுடித்தாள் பார்வதி.

‘எனக்கு அதைப்பற்றியெல்லாம் இப்போது சிந்திக்க அவகாசம் இல்லே. நேரம் கிடைக்கும்போது நானே தங்க ளுக்குச் சொல்லி அனுப்புகிறேன்’ சேதுபதி நாலே வார்த் தைகளில் டக்கென்று பேட்டியை முடித்து விட்டார். பார்வதிக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நன் கொடை இல்லேயே என்பதல்ல; பேட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றுதான்.

அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்போலி ருந்தது. ஆயினும் வணக்கம் என்று கூறி விடைபெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லே.

அந்தத் தங்க எழுத்துக்களே உற்றுப் பார்த்தபடியே யோசிக்கலானுள் பார்வதி. அன்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது அவரைப் பிரிந்து செல்லவே அவளுக்கு மனமில்லே. இதுவரை அவள் யார் யாரையோ, எத்தனை எத்தனையோ அறிவாளிகளே, பிரமுகர்களே, தனவந்தர்களேச் சந்தித்து உரையாடியிருக் கிருள். அப்போதெல்லாம், ஏற்படாத வருத்தம் இவரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படவேண்டும்? இந்தக் கேள்விக்கு அன்று அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஏன் இன்றும் இன்னமும் கிடைக்கவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/20&oldid=689482" இலிருந்து மீள்விக்கப்பட்டது