பக்கம்:விசிறி வாழை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 விசிறி வாழை

இேட்லி என்றால் என் அண்ணுவுக்கு ரொம்பப் பிடிக்கும் ...?? என்றாள் காமாட்சி.

முன்னெரு நாள் கூடச் சொல்லி யிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணுவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிருரா?’ என்று கேட்டாள் பார்வதி.

எஇருக்கிறார்; நமன் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?’ என்று கேட்டாள் காமாட்சி,

வேணும். அது மரியாதை இல்லே. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசு கிறேன், அதுதான் மரியாதை’ என்றாள் பார்வதி.

பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது.

ஒ நீங்களா? வணக்கம், உங்கள் உடல்நிலைபற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண் டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலேயே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஒய்வும் இருந் தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார்’ என்றார் சேதுபதி.

அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. எனக்குக்கூட அப்படித் தான் தோன்றுகிறது. இப்போது தங்களே நான் போனில் அழைத்ததுகூட அதற்காகத்தான். உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும். தயவுசெய்து இன்று மால ஐந்து மணிக்கு இங்கே வந்து போகமுடியுமா? உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும்.’’ பணிவோடும் கனி வோடும் ஒலித்தது பார்வதியின் குரல்.

ஒ வருகிறேனே...இதென்ன சிரமம்? நானும் உங் கஆளப் பார்த்து வெகு நாளாயிற்று. அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வருவ தில்ல. மாலையில் அவசியம் வருகிறேன்...”

ெைராம்ப சந்தோஷம்...” என்று கூறி ரிளிவரை வைத்த பார்வதிக்கு மகிழ்ச்சி தாங்கலில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/200&oldid=689483" இலிருந்து மீள்விக்கப்பட்டது