பக்கம்:விசிறி வாழை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபது 197

“ராஜா இன்று மாலே பாரதியின் அப்பா இங்கே வரப் போகிறார், டி.பனுக்கு இட்லியும் காரமாகத் தக்காளிச் சட்னி வும் போடச் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டு வாசல் தோட்டத்திலேயே காற்றாட உட்கார்ந்து பேசுகிருேம், ஐந்து மணிக்கு அங்கே இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கச் சொல்லு...’ என்றாள்.

‘ஆகட்டும் அத்தை!’’ என்றான் ராஜா. மாலேயில் சேதுபதியைச் சந்திக்கும்போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எப்படி உபசரிக்க வேண் டும்? எவ்வாறு பேச்சைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு வைத்துக் கொண்டாள் அவள்.

மணி ஐந்தடிக்கும்போதே சேதுபதியின் கார் உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்ட பார்வதி, என்றுமில்லாத குதுனகலத்துடன் அவரை வரவேற்க எழுந்து நின்றாள்.

தன்னே வரவேற்கத் தோட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து, நீங்கள் ஏன் கீழே இறங்கி வந்தீர்கள்? நானே மாடிக்கு வந்திருப்பேனே!’ என்றார் சேதுபதி.

‘நான் தினமும் கீழே இறங்கித் தோட்டத்துக்குள் கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறி யிருக்கிறார், ஆகையால் இன்று தங்களுடன் பேசிக் கொண்டே சற்றுநேரம் நடக்கலாம் என்று எண்ணினேன்.” ‘அப்படியா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சோல்லுங்கள்?’ என்றார் சேதுபதி சிரித்துக்கொண்டே.

“இப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டாள் பார்வதி.

‘இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் அழகாயுமிருக் கிறது...” என்றார் சேதுபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே.

பாரதி சுடச்சுட இட்லியும், தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள், !

“பேஷ் எனக்குப் பிடித்த டியன்!’ என்றார் சேதுபதி. ‘எனக்கும்தான்’ என்று கூறினுள் பார்வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/201&oldid=689484" இலிருந்து மீள்விக்கப்பட்டது