பக்கம்:விசிறி வாழை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்தொன்று

‘திருமண விஷயம் என்று தான் கூறியதும், அந்த விஷயத்தை அறிந்துகொள்ள சேதுபதி மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று பார்வதி எதிர்பார்த்தாள். ஆனால், விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் நிதானமிழந்து பரபரப்புக் காட்டுவது அவருடைய சுபாவ மல்லவே!

சேதுபதி கூறப்போகும் பதிலே எதிர்பார்த்தவளாய், அவர் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தாள் பார்வதி.

சற்று நேரம் புன்முறுவலோடு மெளனமாகவே அமர்ந் திருந்த சேதுபதி, ‘எனக்கு இதில் துளியும் ஆடசேப8ண இல்லே...ஆனல்...’ என்று பாதியில் பேச்சை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டார்.

தேவி! இவர் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக் கிறார், ஒரு வேனே நான் கூறுவதை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாரோ??’ பார்வதியின் உள்ளத்தில் திக் கென்றது.

“ராஜா, பாரதியின் சம்மதம்தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே என்று பேச்சை முடித்தார் சேதுபதி.

நிதானம், உறுதி, மன ஆழம் இம்மூன்றையும் மீறி தின்றது அவருடைய அறிவுக் கூர்மை!

திருமண விஷயம் என்றதும், அது ராஜா-பாரதி திருமணம் பற்றியதுதான் என்பதை எவ்வளவு எளிதில் ஊகித்து விட்டார் ஊகித்ததோடு மட்டுமின்றி, தம் யூகத்தில் சந்தேகமே இல்லாதவர்போல் தீர்மானமாக அவர்கள் இரண்டு பேர் சம்மதம்தானே இதில் முக்கியம்? என்றல்லவா கூறுகிறார் ராஜா-பாரதி திருமணம்பற்றித் தான் நான் பேசுவேன் என்பதை அவர் எவ்வாறு அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/203&oldid=689486" இலிருந்து மீள்விக்கப்பட்டது