பக்கம்:விசிறி வாழை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்தொன்று 201

ஞான திருஷ்டியால் அறிந்தது போலல்லவா சொல்கிறார்?? பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை.

உண்மையில் அவள் எண்ணிக் கொண்டிருந்ததும் அது தானே? ராஜாவை, அவனுடைய குழந்தைப் பருவம்முதல் சொந்தத் தாயைப்போல் அன்புடன் சீராட்டி வளர்த்து வருகிறேன். ராஜாவுக்கு அவன் தாய் தந்தை இருவரை யுமே தெரியாது. அவனே என் மடியிலே போட்டு அமுதுாட்டி வளர்த்திருக்கிறேன். அவன் நோயுற்ற காலங்களில் தோளிலே சுமந்து சென்று சிகிச்சைசெய்து வந்திருக்கிறேன். ராஜா இன்று பெரியவகை வளர்ந்து, படித்து, பாஸ் செய்து திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்துவிட் டான். ராஜாவின் திருமணமும் நடந்துவிட்டால் என் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் இந்த நேரத்தில், காலம் கடந்த காலத்தில், பருவமற்ற பருவத்தில் என் உள்ளத்தில் வீண் சபலத்துக்கு இடமளித்து விட்டேன். திருவாளர் சேதுபதியைச் சந்தித்தபோது என் இதயத்தில் தோன்றிவிட்ட உணர்வு, காலம் கடந்த உணர்வு தான். அந்த வித்து முன்விட்டு, இலேவிட்டுச் செடியாகி இப்போது பெரிய மரமாகவே வளர்ந்துவிட்டது. முன்யிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய செடியை மரமானபின் வாள் கொண்டு அறுக்க முற்பட்டிருக்கிறேன்.” -

சோடாபுட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணுடிக் கோலியைப்போல் அந்த உணர்வு என் உள்ளத் தில் புகுந்து அஃப்த்துக் கொண்டிருக்கிறது. இதை என்னல் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பவோ முடியவில்லே. இப்படி எத்தனைக் காலத்துக்கு அந்த உணர்வை என்னுள்ளேயே வைத்து மறுகுவேன்? இதற்கு முடிவே கிடையாதா?’ r

‘என் அந்தரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்தச் சேதியை அவரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன். ஆனல் அதற்குரிய தைரியம் எனக்கு வரவேயில்லை. அவரை நேரில் காணும்போது என் தைரியமெல்லாம் பறந்துபோய் விடுகிறது. உணர்ச்சி வசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/205&oldid=689488" இலிருந்து மீள்விக்கப்பட்டது