பக்கம்:விசிறி வாழை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்தொன்று 03

‘பார்வதியும் அவரும் வெகு தூரத்துக்கு வெகுதூரம் மீண்டும் நெருங்க முடியாத அளவுக்குப் பிரிந்து போய்விடப் போகிற சூழ்ச்சியை அறியாமல்தான் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டராா? அல்லது அறிந்துதான் ஒப்புக்கொண் டாரா?

சலனமற்ற அவர் முகத்திலிருந்து, அமைதியான பதிலி லிருந்து, பார்வதியினுல் எதையுமே விளக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் பச்சைக் குழந்தை போல் கள்ளம் கபடமின்றிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதியைப் பொறுத்தவரை பெரும்பாரம், நீண்ட நாட்களாகச் சுமந்து கொண்டிருந்த இதயச் சுமை அந்தக் கணமே கீழே இறங்கிவிட்டத்தைப் போல் தோன்றியது.

‘அடுத்த வாரத்திற்குள்ளாகவே திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்து விடுகிறேன்...எனக்கும்கூடப் பாரதியின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற ஆசைதான். ராஜா. என்ஜினியரிங் படித்திருக்கிருன். என்னுடைய தொழிற்சாலேயின் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் வெளிநாடுகளுக்குச் சென்று வரப் போகிறேன். நாளேக்கே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். கலியாணத்தைக் கூட இந்த வீட்டிலேயே நடத்திவிடலாம். தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் தாங்கள் இங்குமங்கும் அலேயக் கூடாது. தாங்கள் இருக்குமிடத்திலேயே திருமணத்தை நடத்துவதுதான் நல்லது.”

‘பாரதியும் காமாட்சியும் இந்த வீட்டுக்கு வந்த வேண் நல்ல வேளைதான்.’’ என்றாள் பார்வதி உற்சாகத்தோடு.

‘ஆமாம்; தங்களுக்கும் உடம்பு குணமாகி விட்டால் அப்புறம் எல்லாம் சந்தோஷமாக முடிந்துவிடும். நேர மாகிறது...நான் போய்விட்டு நாளேக்கு வருகிறேன். தாங்கள் இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்-’’ என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

சேதுபதி காரில் ஏறிச் செல்லும்வரை அவரையே கண் கொட்டாமல் கவனிந்துக் கொண்டிருந்தாள் பார்வதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/207&oldid=689490" இலிருந்து மீள்விக்கப்பட்டது