பக்கம்:விசிறி வாழை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 விசிறி வாழை

அவளுடைய மனவேதனையும் நெஞ்சத்தின் நீங்காதநிழலும் அகன்று உள்ளம் லேசாகிவிட்ட உணர்வு, சேதுபதியின்மீது தோன்றிய இரக்க உணர்வு, ராஜா பாரதிக்குத் திருமணம் என்கிற மன நிறைவு, இவ்வளவும் கதம்பமாக அவளைக் குழப்பி உணர்ச்சி வசமாக்கிவிட்டன.

கார் மறைந்ததும், அவள் மெதுவாகத் திரும்பி நடந் தாள். உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தோன்றி அவளேச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவள் மெது வாக அடிமேல் அடி வைத்து நடந்தாள். கால்கள் தள்ளா டின. கண்களில் லேசாக இருள் கவிந்து மின்மினிப் பூச்சிகள் பரக்கத் தொடங்கின. பார்வதிக்கு எதுவுமே தெரியவில்லே. மாப்படிகள் வரை சென்று படிகளைக் கடந்து மேலேயும் போய் விட்டாள். தாழ்வாரத்தை நெருங்கியபோது ஒரே படியாக இருட்டிக் கொண்டு வந்தது. தாழ்வாரத்துச் சுவர், படிகள் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தன.

‘'ராஜா!’ என்று சத்தமிட்டுக் கூப்பிட எத்தனித் தாள். நாக்குத் தடுமாறி, நெஞ்சு உலர்ந்து வார்த்தைகள் வெளி வர மறுத்துவிட்டன. அடுத்த கணமே, தான் கீழே விழுந்துவிடப் போகிருேம் என்கிற உணர்வு தோன்றவே, மாடிப் படிகளின் கைப்பிடியை ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தபோதே அவள் மயக்க முற்றுச் சாய்ந்து விட்டாள்.

‘அத்தை! அத்தை’ என்று அலறிக்கொண்டே ஓடி வந்த ராஜா, பார்வதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அதே சமயம் பாரதி, காமாட்சி, ஞானம் மூவரும் பரபரப்புடன் ஓடிவந்து பார்வதியைக் கட்டிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

அடுத்த கணமே டாக்டருக்கும், சேதுபதிக்கும் தகவல் கொடுக்க போனுக்கு ஓடினன் ராஜா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/208&oldid=689491" இலிருந்து மீள்விக்கப்பட்டது