பக்கம்:விசிறி வாழை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்திரண்டு 207

அமர்ந்திருப்பதைக் கண்டபோது பார்வதிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. கண்களில் பெருகிய கண்ணிரைத் துடைத்தபடியே நீங்களா?’ என்று ஈனமான குரலில் கேட்டாள்.

அவளுடைய குரலில், பார்வையில் உலகத்துக் காதல் மகா காவியங்களின் சோகமனைத்தும் ஏக்கமனைத்தும் பிரதி பலித்தன. மெலிந்த தன் கரங்களை உயர்த்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; பேச முடியவில்லை. -

‘நீங்கள் பேசக்கூடாது...’ மனத்தில் எந்தக் கவலை யும் வைத்துக் கொள்ளக்கூடாது... சேதுபதி அவள் கரங் ககளத் தீண்டி அமர்த்தி நிதானமான குரலில் பேசினர்.

‘எனக்கு எந்தக் கவலையும் இல்லே. இனி நான் நிம்மதி யாக வாழ்வேன். ராஜா-பாரதி திருமணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்’’-பார்வதி தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தாள். *

அவர்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்? தாங்கள் பூரணமாகக் குணமடைந்து பழையபடி கல்லூரிக் குப் போகத் தொடங்கியதும் வைத்துக் கொள்ளலாமே?” என்றார் சேதுபதி.

‘தயவு செய்து எந்தக் காரணத்துக்காகவும் ராஜாபாரதி திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். என்னுடைய உடல் நலம் சரியில்லாததாலேயேதான் அவர்கள் திரு மணத்தை உடனே நடத்திவிட வேண்டுமென்று துடிக் கிறேன்...??

இந்தத் திருமணத்தால் தனக்கும் பார்வதிக்கும் ஏற்படக் கூடிய உறவு முறைபற்றிச் சேதுபதி எண்ணிப்பார்க் காமலில்லே, பார்வதியின் மன அமைதிக்காக அவர் தம் முடைய ஆசைகளை யெல்லாம், உள்ளத்தில் நீண்ட கால மாகப் புதைத்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் தியாகம் செய்துவிடத் தீர்மானித்து விட்டார்.

‘தங்கள் விருப்பப்படியே திருமணத்தைக் கூடிய சிக்கிரம் நடத்தி விடுகிறேன். இன்னும் சில தினங்களுக்குள் வீட்டிலேயே அவர்கள் திருமணம் நடைபெறும்...” சதுபதியின் உறுதிமொழி பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி

-

யைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/211&oldid=689495" இலிருந்து மீள்விக்கப்பட்டது