பக்கம்:விசிறி வாழை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்திரண்டு 209

தான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது...” என்றார் சேதுபதி.

‘ஆயிரம் காலத்துப் பயிர்; ஆற அமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே...?? என்றாள் காமாட்சி.

“முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனல் பார்வதியோ அவசரப்படுகிருள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாருக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?...சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்” என்றார் சேதுபதி.

  • அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு...?? என்றாள் காமாட்சி.

சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம் முகூர்த்தப் புடவைகளெல்லாம் தானேதான் ஸெலக்ட் செய்யப் போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியானத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர் களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினல் போதும். மேளத் தைக் கெர்ட்டித் தாலியைக்கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல்கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம் என்றாள் பார்வதி.

‘எனக்கும் அதே ஐடியாதான்.கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது.”

பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான ஆருத்துகளையே கொண்டிருக்கிே ஆம்..” என்று மறை பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினுள் பார்வதி. -

“ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/213&oldid=689497" இலிருந்து மீள்விக்கப்பட்டது