பக்கம்:விசிறி வாழை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்திரண்டு 211

பார்வதி சிரித்து விட்டாள். - ::ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?...”

மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறன்: என்று கூறிச் சிரித்தான் ராஜா.

நேற்றுப் பந்தல் போடும்போதே, எள்ன விசேஷம்: என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை’ என்றார் சேதுபதி.

‘பாவம் ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக் கிருன்...ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!’ என்று கேட்டாள் பார்வதி.

“பிடித்திருந்தால் நீங்கள்தான் கட்டிக் கொள்ளுங் களேன். பனரஸ் பட்டு-நல்ல கலர்...” என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறிய தைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லே. -

இேம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டு மென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை...’’ என்றாள் பார்வதி.

‘தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும்தான் ரொம்ப நாளாக ஆசை!” என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார். இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது? மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலாள்ை பார்வதி.

ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதேமாதிரி புடவை ஒன்றுதான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமாயிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை. வெள்ளிக்கிழமை கால குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/215&oldid=689499" இலிருந்து மீள்விக்கப்பட்டது