பக்கம்:விசிறி வாழை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 விசிறி வாழை

பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந் தேறியது. **

மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட் ககாத் தன் அகக் கண்ணுல் கண்டு களித்துக் கொண்டிருந் தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணிர் பெருக்கெடுத் தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந் தாள் அவள்.

திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுதிபதியை வணங்கி எழுந்தனர்.

முேதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்’’ என்று கூறி, அவர்களே மேலே அழைத்துச் சென் ருர் சேதுபதி.

தான் வாங்கிக் கொடுத்த அந்த பரைஸ் பட்டுப் புடவையை அணிந்துகொண்டு பார்வதி கட்டிலில் படுத் திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது.

  • அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிருேம்’ என்றான் ராஜா.
  • தீர்க்காயுசுடன் பதினறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்’ என்று கூறியபடியே படுக்கையில் சாய்ந் திருந்த பார்வதி எழுந்து உட்கார்ந்து மணமக்களைத் தன் இரு கைகளாலும் தழுவிக் கொண்டாள். ‘என் ஆசை நிறைவேறி விட்டது; இனி எனக்கு நிம்மதிதான்; இப்படியே கண்களை மூடி விட்டாலும் கவலேயில்லே. பாரதி! என் அருகில் வா...’ என்று பாரதியின் கரங்களைப்பற்றி அழைத்த பார்வதி, அவள் தலையை அன்போடு வருடி, நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்?’ என் ராஜா ரொம்ப அதிஷ்டக்காரன்’ என்றாள்.

பாரதியின் மணக் கோலத்தைக் கண்டபோது சேது பதிக்குத் தமது மனைவி சரஸ்வதியின் ஞாபகம் தோன்றி விடவே துக்கம் நெஞ்சை அடைத்தது. சரஸ்வதியின் சாயலாகவே காட்சி அளித்த தம் மகளைப் பார்த்தபோது சேதுபதியின் கண்களில் நீர் துளித்தது. அவர் கண்கள் கலங்குகுவதைக் கண்ட பார்வதியின் நெஞ்சம் உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/216&oldid=689500" இலிருந்து மீள்விக்கப்பட்டது