பக்கம்:விசிறி வாழை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று 215

‘மீனட்சிக்கும்-கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீட்ைசி? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற் கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?’ என்று சிரித் துக்கொண்டே கேட்டான் ராஜா.

எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம் ...” என்று கேட்டாள் பார்வதி.

‘'வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்’ என்று கூறிப் படிக்கத் தொடங்கினன் ராஜா. -

‘மீளு என்கிற மீனுட்சிக்கும்’ என்று அவன் தொடங்கிய போதே ஒகோ, நம்ம மீளுவுக்கா?’ என்றாள் பார்வதி.

“யார் அத்தை அது மீன?’’ ‘என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி...சரி...இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம், வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்...ம்... இந்தக் கலி யாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லே எனக்கு...” என்று பெரு மூச்செறிந்தாள்.

“ராஜா! இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிருயா?’’

“ஆகட்டும் அத்தை??’ ராஜா கீழே போய்விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. ‘ரத்தக் கொதிப்புள்ள வர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது என்று டாக்டர் கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினென்றுக்குமேல் ஆகிவிட்டது. காமாட்சி மாடி வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எட்டிப் பார்த்தபோது கட்டிலில் பார்வதி அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது. சேதுபதி மெதுவாக நடந்து போய், கட்டிலுக்கருகில் நின்று பார்வதியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/219&oldid=689503" இலிருந்து மீள்விக்கப்பட்டது