பக்கம்:விசிறி வாழை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 விசிறி வாழை

கவனித்தார். மூச்சு லேசாக இழையோடிக்கொண்டிருந்தது. பலவீனமாகத் திரானியற்றுக் கிடந்த அவள் நிலையைக் கண்ட சேதுபதியின் உள்ளம் வேதனைக்குள்ளாயிற்று. மெளனமாகவே, சந்தடியின்றி வராந்தாவுக்குத் திரும்பி வந்தவர், காமாட்சி!” என்று மெதுவான குரலில் அழைத் தார்.

பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போயிருந்த காமாட்சிக்குச் சேதுபதியின் குரல் எங்கோ பாதாளத் திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் காமாட்சி! என்று சேதுபதி அழைத்த பிறகே, அவள் விழிப்படைந்து எழுந்து உட்கார்ந்தாள். -

‘ரொம்ப நேரமாயிற்றா அண்ணு நீ வந்து...”* ‘இல்லே, காமாட்சி: இப்போதுதான் வந்தேன்;... பார்வதி ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாளா? அவளுக்கு இப்போது எப்படி இருக்கிறது?’’

‘'எதுவுமே சாப்பிடவில்லை. சாயந்திரம் கொஞ்ச பழ ரசம் பிழிந்து கொடுத்தேன். அதில் பாதியைக் குடித்து விட்டுப் பாதியை அப்படியே வைத்து விட்டாள்...எனக் கென்னவோ அவள் நல்லபடி பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று ஒரே கவலையாயிருக்கிறது, அண்ணு!’

“நம்மால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்து விடலாம் காமாட்சி! எப்படியும் அவள் பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’’

  • நீயும் பணத்தைப் பணம் என்று பாராமல்தான் செல. வழித்துக் கொண்டிருக்கிறாய்! மூன்று மாதமாக இதே கவலே தான் உனக்கு. நல்லபடியாக அவள் பிழைத்தெழுந்திருக்க வேண்டும்.’’ பெருமூச்சு விட்டாள் காமாட்சி. -

“நீ உடலால் உழைக்கிறாய். நான் பொருகளத்தானே செலவழிக்கிறேன்? உயிருக்கு வில் கிடையாது. பணம் இன்று வரும். நாளே போகும். பார்வதியின் உயிர் விலே மதிப்பற்றது. அவள் உயிரைக் காப்பாற்ற நான் எதையுமே இழந்துவிடத் தயாராயிருக்கிறேன். பார்வதியைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/220&oldid=689505" இலிருந்து மீள்விக்கப்பட்டது