பக்கம்:விசிறி வாழை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று 219

கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலே வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஒடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனே மாறுதல்கள்! -

தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நகளே அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண் டாள். அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்றுமாத இடைவேளே மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனுலும் அதுவே அவளுக்கு மூன்றுயுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற எக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக் குப் பேய் ஒரு முறை அதைக் கண்ணுல் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது.

‘மணி என்ன இருக்கும்? என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது.

அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, ‘அத்தை எடம்பு எப்படி இருக்கிறது?’ என்று பரிவோடு விசாரித்தான்.

  • நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!’ என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க ‘அப்படி யெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் செளக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி ஜம்’ மென்று காலேஜுக்குப் போகப் போlங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்’ என்றான்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/223&oldid=689508" இலிருந்து மீள்விக்கப்பட்டது