பக்கம்:விசிறி வாழை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று 221

ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள். வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது.

அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?’ என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிருன்...”

நீ என்ன சொன்கு ய்??? * இப்போது பரவாயில்லை’ என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென் ருல் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!” என்றான் தrாஜா.

‘பாவம், நன்றியின் சின்னம் இவன்!” என்று இரக்கப் பட்டாள் பார்வதி.

கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கியபோது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி,'ஹல்லோ! குட்மார்னிங் என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. மிஸஸ் அகாதா-பாவம் மிக நல்லவள்; கடமை தவருதவள்’’ என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னல் போய் நின்றது. ஒடி வந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லே. ஆலுைம் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி.

  • ராஜா! என்கனக் கொண்டுபோய் என் அறையில் விடு!??

ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/225&oldid=689510" இலிருந்து மீள்விக்கப்பட்டது