பக்கம்:விசிறி வாழை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விசிறி வாழை

இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலி போகனத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனே நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனுள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான்.

பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேடடுச் சிறு குழந்தைபோல் சிரித் துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணுேட்டமிட்டு அனுபவித்துவிட்டு, ‘'ராஜா புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா’ என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான்.

பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து எtட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணுடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன் றுடனும் மான சீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது. ராஜா காரைக் கொஞ்சம் நிறுத்து’’ என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந் தாள். .

  • நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணிர் ஊற்று கிறார்களோ இல்லையோ?” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், ம்...புறப்படு போகலாம்’ என்றாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/226&oldid=689511" இலிருந்து மீள்விக்கப்பட்டது