பக்கம்:விசிறி வாழை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று

கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில்! அத்தையை நல்லபடி கொண்டு சேர்க்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது. அப்புறம்தான் அவனுக்கு மூச்சு வந்தது.

ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்வி அத்தையின் களேப்புத்தீரக் குடிக்கச் சொன்னன். அவளால் ஒரு வாய்க்குமேல் அருந்த முடியவில்லே. அன்றிரவெல்லாம். அவள் வேப்பங்கன்று. அகாதா!...” என்று ஏதோதோ வாய் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

காலேயில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடக் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள்.

நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள். விடுமுறையைக் கழிக்க பங்களுருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலேப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி வந்துவிட்டாள்.

‘அத்தை அகாதா வந்திருக்கிறார்’ என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதா வைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன் ள்ை. அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது.

“அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந் தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீதான் கவனித் துக்கொள்ள வேண்டும்.’’ பார்வதியால் அவ்வளவுத்தான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள்.

ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ணவேண்டாம்’ என்று கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள்.

அன்று மாலே சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும்.

கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/227&oldid=689512" இலிருந்து மீள்விக்கப்பட்டது