பக்கம்:விசிறி வாழை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விசிறி வாழை

அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெது வாகக் கட்டிலே விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள்.

‘அத்தை...அத்தை எதுக்காக எழுந்து வந்தீங்க??? என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான்.

  • ராஜா ! என்னேக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக் கிருரா?’’ இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆல்ை முடியவில்லை. அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. ‘எனக்கு ஒரு குறையுமில்லே. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட ம்மதியுடன் நான் போகிறேன்’ அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

அவ்வளவுதான் , அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது.

‘அத்தை!’’ வீரிட்டு அலறிவிட்டான் ராஜா. ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலே குனிந்து தின்றது.

போர்வதியின் உயிர் விலே மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்’ என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தைபோல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்.

கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையில்ை யாருக்கும் எவ்விதப் பயனும் கிடை யாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்ை பாக முடிந்துவிட்டது. -

சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப் பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/228&oldid=689513" இலிருந்து மீள்விக்கப்பட்டது