பக்கம்:விசிறி வாழை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக் கதையைத் தாங் களோ அல்லது ஜெயகாந்தனே தான் எழுத வேண்டும்,?? என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினர் அவர்.

கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித் திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன்.

ஆயினும் இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடி யோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?’’ என்ற பயம் இருக்கத்தான் செய்தது. -

கதையைக் குட்டிச்சுவராக்கி என் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் அவர் பெயரையும் கெடுத்து விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்தக் கதையை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கருத்துகளும் கற்பனைகளும் வந்துகொண்டே இருந்தன. முழு உருவம் பெருமலிருந்த கதை, சொல்லச் சொல்ல, முழுமை பெற்றது. எழுதிவிடலாம் என்ற துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்டபோதிலும் கூடவே இன்னெரு, சந்தேகமும் தோன்றியது. அப்போதுதான் வாஷிங்டனில் திருமணம் என்னும் நகைச்சுவைத் தொடரை எழுதி முடித் திருந்தேன். ஆதலால் இந்தக் கதையும் அம்மாதிரி நகைச் சுவை பொருந்தியதா இருக்கும் என்று வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமல்லவா? எனவேதான் முன்னெச்சரிக்கை யோடு முன்னுரையில் ‘இது ஒரு புதுமையான காதல் நவீனம். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களில் யாராவது ஒரு சொட்டுக் கண்ணிர் விடுவார்களானல், அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்? என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் முடிவுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/231&oldid=689517" இலிருந்து மீள்விக்கப்பட்டது