பக்கம்:விசிறி வாழை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விசிறி வாழை

சென்று அவரை வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வேன். மேடையில் போய் அமர்ந்ததும் ஜட்ஜுக்கும் அவருக்கும் ராஜாவைக் கொண்டு மாலே சூட்டுவேன். சமயத்தில் மாலேயைக் காணுமல் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. விழா முடிந்ததும் அவர்களிருவடைய மாலைகளை யும் ஞாபகமாகக் கொண்டுபோய்க் காரில் வைக்கவேண்டும். இந்த ஏற்பாடுகளே யெல்லாம் பார்த்துவிட்டு அவர் அரேஞ்ச்மென்ட் ரொம்ப கிராண்ட்’ என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

பார்வதியின் சிந்தனையை டெலிபோன் மணி கலேத்த போது யாராயிருக்கும்? ஒருவேளே...? என்று யோசித்த வளாய் ரிளtவரைக் கையில் எடுத்தாள்.

‘நாளே இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் விமானத் தில் அவசரமாகப் பம்பாய் செல்ல வேண்டியிருப்பதால், நாளை விழாவின் இடையிலேயே தங்களிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலே நிகழ்ச்சியில் கடைசி வரை உட்கார்ந்திருக்க முடியாமலிருப்பதற்காக மன்னிக்க வேண்டும்.’’ இப்படிப் பேசியது திருவாளர் சேதுபதி அல்ல; அவருடைய அந்தரங்கக் காரியதரிசி.

பார்வதிக்கு இந்தச் செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவள் என்னென்னவோ கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள். விழா முடிந்த பிறகு அவரை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரமாவது அவருடன் உரையாடிக் கொண்டிருக்கவேண்டும். அந்தக்குறைந்த அவகாசத்தில் எதைப்பற்றி யெல்லாம் பேசுவது என்பதுபற்றி முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தானே அதிகமாகப் பேசி விடாமல் அவரைப் பேசத் தூண்டி, அவர் பேசுவதைக் கேட்கவேண்டும் .

முதலாவது, அவருக்கு எந்த ‘சப்ஜெக்ட்டில் நாட்டமிருக் கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். பிறகு அந்த சப்ஜெக்டிலேயே பேச்சைத் தொடரவேண்டும். அவரைத் திருப்திப் படுத்துவதற்காக, அதில் நமக்குள்ள எண்ணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/24&oldid=689520" இலிருந்து மீள்விக்கப்பட்டது