பக்கம்:விசிறி வாழை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விசிறி வாழை

பரமஹம்சரும் தேவியாரும் காட்சி அளித்துக்கொண்டிருந் தனர். அடர்ந்த ஊதுவத்தியின் நறுமணம் ஹாலைப் புனித மாக்கிக் கொண்டிருந்தது. ராஜா, மேடையின் ஒரத்தில் அடக்கமாக நின்றுகொண்டிருந்தான்.

சபையிலுள்ளவர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தபோது சங்கோசமும் கூச்சமும் அவனைச் சூழ்ந்துகொள்ளவே, திரைக்குப் பின்னல் மறைந்துகொண்டான்.

முதலில், டாக்டர் குமாரி பார்வதி-சாரதாமணிக் கல்லூரியின் தலைவிதான் மேடைமீது பிரசன்னமாள்ை. பின்னேடு நீதிபதியும் சேதுபதியும் தொடர்ந்து வந்து நாற் காலியில் அமர்ந்தார்கள்.

இறை வணக்கம்’ என்று பார்வதி நிகழ்ச்சி நிரல் எடுத்துப் படித்ததும், பாரதியும் இன்னெரு மாணவியும் மேடைமீது வந்து பாடத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

அடுத்தாற்போல் தலைவர்களுக்கு மாலே போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒரு சின்னக் காரியத்துக்காக ராஜா, தன்னைக் காலேயிலிருந்தே தயார்ப்படுத்திக் கொண்டிருந் தான். கடைசியில் பிரின்ஸிபால் பார்வதி பேசுவதற்காக எழுந்து நின்றபோது, சபையில் எழுந்த கரகோஷ ஆரவாரம் அடங்க ஐந்து நிமிஷ நேரம் ஆயிற்று.

“இவ்விழாவுக்குத் தலைமை தாங்க இசைந்துள்ள நீதிபதி அவர்களே! ஹாஸ்டலேத் திறந்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர் சேதுபதி அவர்களே!’’ என்று பேசத் தொடங்கியபோது மாணவிகள் மீண்டும் கை தட்டி மகிழ்ந்தனர்.

முதலில் தலைவரைப்பற்றி நாலே வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தி முடிந்ததும், சேதுபதி யைப்பற்றி ஆரம்பித்தாள். அவருடைய பெயரை உச்சரிக் கும்போதே பார்வதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/26&oldid=689522" இலிருந்து மீள்விக்கப்பட்டது