பக்கம்:விசிறி வாழை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இரண்டு 28

திேருவாளர் சேதுபதியைப் பற்றி நான் அதிகம் கூறத் தேவையில்லே. இந்த அழகான ஹாஸ்டலேக் கட்டிக் கொடுத்த பெருமை அவரையே சேரும். முதன்முதலில் நன் கொடை விஷயமாக நான் அவரைக் காணச் சென்றபோது அவர், ‘இப்போது எனக்கு நேரமில்லை. பின்னல் அவகாசம் கிடைக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். பெரிய மனிதர்கள் வழக்க மாகக் கூறும் பதில் இதுதான் என்பது என்னைப்போல் நன்கொடை வசூலிக்கச் செல்பவர்களுக்கு நன்கு தெரியு மாகையால், அவர் கூறிய பதிலில் நம்பிக்கை இழந்த வளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பவே இல்லை. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவும் இல்லே. நாளே என்பதும் அப்புறம் என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் என்று எண்ணிக்கொண் டேன். உண்மையாகச் சொல்கிறேன்; இவரும் அந்தப் பழமொழிக்கு விலக்கல்ல என்றே எண்ணியிருந்தேன்.

ஆல்ை, நான் சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்த வாரமே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செக்கும் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது, எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

தங்கள் கல்லூரியில் கட்டப்போகும் ஹாஸ்டலுக்காக இத்துடன் ஒரு சிறு தொகைக்குச் செக் அனுப்பியுள்ளேன். இதைக் கொண்டு ஹாஸ்டல் கட்டட வேலையைத் தொடங்க வும். மேற்கொண்டு ஹாஸ்டலே முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவு எதுவானலும், அது என்னுடைய தாகவே இருக்கட்டும் என்று அதில் எழுதியிருந்தது. “அன்று அவர் அனுப்பியிருந்த அந்தச் சறுதொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்தான்!”

எவ்வளவோ கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்ட பார்வதி, இந்த இடத்தில் மாணவிகள் பலமான கரகோஷம் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்து, தன் பேச்சைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/27&oldid=689523" இலிருந்து மீள்விக்கப்பட்டது