பக்கம்:விசிறி வாழை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விசிறி வாழை

கண்ணுடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே! அதற்காகத்தான் நானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து சேர்ந்தேன்!’ என்றாள்.

முக்குக் கண்ணுடியை மறந்து வந்து விட்ட விஷயம் சேதுபதிக்கு அப்போதுதான் புரிந்தது.

‘அடாடா மிக்க நன்றி! நாளேக்கு முக்கியமான டாகு மென்ட்டுகளையெல்லாம் படித்துக் கையெழுத்துப் போடவேண்டும். அந்த நேரத்தில் இது இல்லையென்றால் ரொம்பத் தடுமாற்றமாய்ப் போயிருக்கும். இதன் முக்கியத்தை உணர்ந்து தாங்கள் இவ்வளவு அக்கறையோடு இதைக் கொண்டு வந்து கொடுத்ததற்குத் தங்களுக்கு எப்படி நன்றி *றுவதென்றே தெரியவில்லை என்றவர், “...ம்...விழா ரொம்பச் சிறப்பாக நடந்தது. ஏற்பாடு அதைக் காட்டிலும் சிறப்பாயிருந்தது’ என்றார், -

‘தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது’ என்று பார்வதி பதில் கூறிள்ை.

அவர்களிடைய சம்பாஷனை இரண்டு அல்லது மூன்று நிமிடமே நீடித்தது. இதற்குள் பம்பாய் செல்லும் பிரயாணிகள் விமானத்துக்குச் செல்லவும்: என்ற அசரீறி அறிவிப்பு ஒலித்தது.

“நான் வரட்டுமா?’ என்று எழுந்து நின்று கைகூப்பி வணங்கி விட்டு விமானத்தை நோக்கி நடக்கலானர் சேதுபதி. பார்வதியின் முகம் ஏன் ஒளியிழந்து உற்சாக மிழந்து போயிற்று?

விமானத்தில் போய் அமர்ந்து கொண்ட சேதுபதி, கண்ணுடிப் பலகணியின் வழியாகப் பார்வதியையே பார்த்துக் கொண்டிருந்தார். உறுதி உறைந்த அந்த உள்ளத்தை ஏதோ ஒன்று அசைத்தது.பார்வதியுடன் சிறிது நேரம்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் அவளே விட்டுப் பிரியும்போது. வெகு நாள் பழகிவிட்ட ஒருவரைப் பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/32&oldid=689529" இலிருந்து மீள்விக்கப்பட்டது