பக்கம்:விசிறி வாழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து மூன்று

மாடிப் படிகளின்மீது வேகமாக வந்து விழும் காலேப் பத்திரிகையின் சலசலப்பு, பக்கத்து வீட்டுப் பசுமாட்டின் கனிந்த குரல், பால் டிப்போ சைக்கிள் மணி ஓசை, பார்வதி வீட்டுக் கடிகாரம் மணி ஆறடிக்கும் சுநாதம்-இவை யாவும் ஒரே சமயத்தில், சற்று முன்பின்னக நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள்.

அந்தப் பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தின் ஒலி பார்வதிக் குப் புதிதல்ல. ஆனால் இன்று மட்டும் அதன் ஒலி அவள் செவிகளுக்கு இனிமையாகவும், இதயத்துக்கு இதமாகவும் இருப்பானேன்?

அந்தக் கடிகாரத்தைக் காணும் போதெல்லாம் பார்வதிக்குத் தன் கல்லூரியில் நீண்ட காலமாகப் பிரெஞ்சு மொழி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மிஸஸ் அகாதா வின் உருவம் நினேவில் தோன்றும். உடனே, அவள் குடை யைப் பிரித்துக் கொண்டு இடது காலே விந்தி விந்தி நடக்கும் காட்சிதான் கண்ணெதிரில் நிற்கும்.

இந்தக் கடிகாரத்தைப் போலவே தன் கடமையைத் தவருமல் செய்து வரும் அகாதாவினிடத்தில் பார்வதிக்குத் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு.

பார்வதி ஏதோ ஒர் உணர்ச்சிக்கு வசமாகி, அமைதி இழந்த நிலையில் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தாள்.

...முதல் நாள் இரவு விமானக் கூடந்துக்கு விரைந்து சென்று மூக்குக் கண்ணுடியைச் சேதுபதியிடம் கொடுத்த போது ‘அடாடா, மிக்க நன்றி” என்று மலர்ந்த முகத் துடன் அவர் வாங்கிக் கொண்டதும், தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது? என்று அவள் கூறியதும். அவர் தங்கள் ஏற்பாடு மிக மிகச் சிறப்பாயிருந்தது’ என்று அவளைப் புகழ்ந்ததும்...பார்வதி

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/34&oldid=689531" இலிருந்து மீள்விக்கப்பட்டது