பக்கம்:விசிறி வாழை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து மூன்று சுருதி சுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறுக்கிடவே இப்போது அவள் விழிப்படைந்து வயதைப்பற்றி எண்ணுகிருள்.

பார்வதி மீண்டும் யோசிக்கத் தொடங்கிள்ை. நீங்கள் ஒளவையைப் போல் அறிவாளிகளாக விளங்க ஆசைப்பட வேண்டும். ஆனல் ஒளவை மாதிரி கலியாணமே வேண்டாம் என்று சொல்லி விடக்கூடாது.” -

இந்த வார்த்தையை அவர் மாணவிகளுக்கு மட்டும்தான் கூறினரா? அல்லது என்னையும் மனத்தில் வைத்துக்கொண்டு மறைமுகமாகக் கூறினரா? அப்படியானல் அதன் உட் கருத்து?... பார்வதிக்கு விளங்கவில்லை.

கீழே, லதா மங்கேஷ்கரின் பாட்டு ஒன்றை ராஜா சீட்டிக் குரலில் இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. அதிலிருந்தே அவன் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருக்கிருன் என்பதைப் பார்வதி ஊகித்துக் கொண்டாள். குளிக்கும்போதுதான் அவனுக்குக் குஷியாகப் பாட வரும். ராஜாவின் சீட்டி அன்று அவளுக்குப் பிடித்திருந்தது.

ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதன்மூலம் அமைதியைப் பெற எண்ணிய பார்வதி புத்தக அலமாரியைத் திறந்து கைக்கு வந்த ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

சீனப் பேரறிஞர் லின்யுடாங் எழுதிய புயலில் ஓர் இல? என்னும் புத்தகம் வந்தது. அதைக் கண்ட பார்வதி, ஏறக் குறைய என் உள்ளமும் இப்போது புயலில் சிக்கிய இலை யாகத்தான் இருக்கிறது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள். .

புத்தகத்தைப் பிரித்தாள். அது எந்த இடத்தில் பிரிந் ததோ அந்தப் பக்கத்திலிருந்த வரிகளைப் படிக்கத் தொடங் கிள்ை. . -

“மனிதனுடைய முதல் நாற்பது ஆண்டுக்கால வாழ்க்கை பில் சோதனைகள் நடக்கின்றன. அடுத்த நாற்பது ஆண்டு வாழ்க்கை அவற்றைப் பரிசீலித்து மார்க்குப் போடுகிறது!’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/37&oldid=689534" இலிருந்து மீள்விக்கப்பட்டது