பக்கம்:விசிறி வாழை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விசிறி வாழை

பார்வதி சிரித்துக் கொண்டாள். எனக்குப் பரீட்சையே இப்போதுதானே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரிசீலித்து மார்க்குப் போட நான் மறு பிறவிதான் எடுத்தாக வேண்டும்.”

அவள் பலகணியின் வழியாக வாசலை எட்டிப் பார்த்த போது விசிறி வாழை குளுகுளு வென்று அழகாக ஓங்கி வளர்ந்து காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. ராஜா பெரிய கத்தரிக்கோல் ஒன்றால் அதன் இலைகளைத் துண்டித்துக்கொண்டிருந்தான்.

“ராஜா ! ஏன் அந்த இலைகளே வெட்டுகிறாய்?’ பார்வதி கேட்டாள்.

“இதில் இரண்டு இலைகள் மட்டும் பழுத்து மரத்தின் அழகையே கெடுக்கிறது, அத்தை!... என்றான் ராஜா.

பார்வதி துணுக்குற்றவளாய் நரைத்துப் போன தன் கூந்தல் இழைகளைத் தடவிப் பார்த்துக்கொண்டாள்.

அடுத்த கணமே அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, கல கலவென்ற குழந்தைச் சிரிப்பு எல்லாம் நினைவில் தோன்றி நெஞ்சத்தை நிறைத்தன.

கீழேயிருந்து வந்த சாம்பிராணிப் புகையின் தெய்விக மணம், மணி ஒன்பதரை ஆகி விட்டது என்பதை உணர்த்தியது.

பார்வதி கீழே இறங்கிச் சென்று அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, பகவான் பரம ஹம்சரை யும் தேவியையும் வணங்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கலாசாலைக்குப் புறப்பட்டாள். கார் கேட்டைத் தாண்டும் போது அங்கு உட்கார்ந்திருந்த செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று மரியாதை செலுத்தின்ை. அவளுடைய கார் கலாசாலேயின் காம்பவுண்ட் கேட்டை நெருங்குவதற்கும் பிரெஞ்சு மொழி ஆசிரியை மிஸஸ் அகாதா ஒற்றைக் காலே விந்தி விந்தி’ நடந்து கேட்டுக்குள் துழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/38&oldid=689535" இலிருந்து மீள்விக்கப்பட்டது