பக்கம்:விசிறி வாழை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து நான்கு

கல்லூரி ஆண்டு விழா முடிவுற்று ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. பாரதியும் ராஜாவும் இதற்குள் மூன்று முறை சந்தித்து விட்டதுமன்றி வெகுநாளைய சிநேகிதர்களைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர்.

அவர்களுடைய சந்திப்புகள் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டவை அல்ல. ரகசியமானதும் அல்ல. இயற் கையாக, சகஜமாக அவர்களே எதிர்பாராமல் ஏற்பட்டவை தான். ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அவர்கள் உள்ளத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அதற்காக அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமையன்று கூட வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, வெளியே போக வேண்டுமெனப் பாரதி எண்ண வில்லை. அப்படிச் செல்வது அவள் வழக்கமுமில்லை. அன்று அவளைத் தூண்டி இழுத்தவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படிக்கும் அவளுடைய சிநேகிதி மிஸ் டுலிப்தான். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு அன்று பிறந்த தினமாகையால், பாரதியை அவள் ஐஸ் கிரீம் பார்லருக்கு வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தினள்.

‘இன்று என்னுடைய பர்த்டே"; உனக்கு ஆல்மண்ட் க்ரீம் வாங்கித் தரப்போகிறேன். அப்புறம் இரண்டு பேரு மாகச் சினிமாவுக்குப் போகலாம்’ என்றாள் டுலிப்.

ஐஸ்கிரீம் ஆசை எந்தப் பெண்ணைத்தான் விட்டது? ஆல்மண்ட் க்ரீம்” என்றதுமே பாரதி நாக்கில் ஜலம் ஊற, *ஹய்யா...வெரிகுட்!” என்றாள். அப்புறம் சினிமாவுக்கும் போகலாம் என்று டுலிப் கூறிய போது, என்ன பிக்சர்?’’ என்று கேட்டாள் பாரதி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/42&oldid=689540" இலிருந்து மீள்விக்கப்பட்டது