பக்கம்:விசிறி வாழை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விசிறி வாழை

இருட்டில் தனக்குத் தெரித்தவர்கள் யாராவது வந்திருக் கிறார்களா என்று பாரதி சுற்றுமுற்றும் கண்ணுேட்டமிட்ட போது. ஆமாம்--ராஜா சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந் தான்! அவனைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். ஆன லும் தான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிடப்போகிறதே என்று கவலைப்பட்டாள்.

காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னல் அவன் பாரதி யைச் சந்தித்தபோது, படம் பார்க்க வருகிருயா?’ என்று அழைத்தான். அவள் செல்ல மறுத்துவிட்டாள். இப்போது மட்டும் தான் வந்திருப்பதைக் கண்டால், ராஜா என்ன நினைத்துக் கொள்வான்?

இடைவேளையில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிய ராஜா, அங்கே பாரதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போனன். ஆயினும் படம் முடியும்வரை அவன் அவளேக் கண்டுகொள்ளவே இல்லே, பாரதிக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. எங்கே தன்னக் கண்டதும் பாய்ந்து வந்துவிடுவானே என்று பயந்த அவளுக்கு, அவ னுடைய பெருந்தன்மையான போக்கு நிம்மதியை அளித்தது.

பாரதி, லேசாகத் தன் கண் இதழ்களே உயர்த்தி அவன் என்ன செய்கிருன் என்று கவனித்தாள். அவன் தேநீரைச் சுடச்சுடக் குடித்துவிட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டு திணறினன். ராஜா எதிலுமே கொஞ்சம் அவசரப் புத்திக் காரர். அன்று அவசரப்பட்டு ஆணி அடிக்கும்போது கையை நசுக்கிக் கொண்டார். இன்று அவசரப்பட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று எண்ணியபோது அவ ளுக்கு அவன்மீது இரக்கமே உண்டாயிற்று. இன்ைெரு நாள் அவன் வாணலியில் வெந்து கொண்டிருந்த கோஸ் கறியைப் புகையப் புகைய வாயில் போட்டுக்கொண்டு தவித்த தவிப்பு பாரதிக்குத் தெரியாது. -

படம் சீக்கிரமே முடிந்துவிட்டது. நன்றாயிருக்கிறதோ, இல்லையோ இங்கிலீஷ் படங்களில் இது ஒரு பெரிய செளகரி யம். ராஜா எல்லோருக்கும் முன்னுல் எழுந்து வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/44&oldid=689542" இலிருந்து மீள்விக்கப்பட்டது