பக்கம்:விசிறி வாழை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்துதான்கு 4] செல்வதைப் பாரதி கவனிக்கத் தவறவில்லை. அவன் தியேட் டர் வாசலில் போய் ஒரு புறமாக ஒதுங்கி நின்றுகொண் டான். பாரதியாகவே தன்னக் கண்டுவிட்டுப் பேசில்ை, தானும் பேசுவது. இல்லையென்றல் பேசாமலேயே வீட்டுக் குப் போய்விடுவது என்ற முடிவுடன் அவன் காத்திருந்தான். வெளியே வந்த டுலிப்பும் பாரதியும் பஸ் ஸ்டாண்டில் போய் நின்று கொண்டனர். டுலிப்பின் சுருள் சுருளான பொன்னிற மயிர்க் கற்றைகள் அவன் கவனத்தை ஈர்த்தன. இந்த ஆங்கிலோ இந் தி யப் பெண்களுக்குத்தான் ஆண்டவன் எப்படி ஞாபகமாகப் பொன்னிறக் கூந்தலைப் படைக்கின்றனே என வியந்துகொண்டான். நல்ல வேளை யாக முதலில் டுலிப்பின் பஸ் வந்துவிடவே, ‘நான் வருகிறேன் பாரதி பை, பை’ என்று சொல்லிக் கொண்டே அவள் பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். அடுத்த கணமே பாரதியின் கண்கள் ராஜாவைத் தேடின.

அவன்தான் அவசரக்காரன் ஆயிற்றே! பாரதி அவனே அழைக்கும் வரை காத்திருப்பான?

என்ன பாரதி படம் எப்படி இருந்தது. டைடில் பிரமாதம் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்துவிட்டான்.

டைடில்தான் பிரமாதம். படம் சுமார்தான். ஒரே போர்!..தலைவலி’ என்றாள் பாரதி.

‘அதோ அந்த ஓட்டலுக்குள் சென்று காப்பி சாப்பிட லாம், Jr. தலைவலி பறந்து விடும்’ என்று சற்றுத் தூரத்தில் தெரிந்த ஓட்டலக் காட்டினன் ராஜா.

‘நேரத்தில் வீட்டிற்குப் போக வேண்டும்’ என்றாள் யார .” -

‘டாக்ளியில் போய் விடலாம், கவலைப்படாதே’ என் குன் ராஜா, . . -

இருவரும் அந்த ஒட்டலுக்குள் புகுந்து திறந்த வெளி வாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னுல் உட்கார்ந்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/45&oldid=689543" இலிருந்து மீள்விக்கப்பட்டது